

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மற்றும் ஆடுதுறை, திருபுவனம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காவல்துறையினர் பேரூராட்சி பணியாளர்கள், வருவாய்த்துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆடுதுறையைச் சேர்ந்த பாலன் என்பவர் ஆயிரம் இளநீரை மினி லோடு வேனில் ஏற்றிக்கொண்டுவந்து, அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அளித்தார்.