Thanjavur | பட்டாக்கத்தியை வைத்து நடுரோட்டிலேயே ஆக்ரோஷமாக அடிக்க பாய்ந்த நபர்.. அலறி ஓடிய மக்கள்

Thanjavur | பட்டாக்கத்தியை வைத்து நடுரோட்டிலேயே ஆக்ரோஷமாக அடிக்க பாய்ந்த நபர்.. அலறி ஓடிய மக்கள்

தஞ்சையில் பட்டாக்கத்தி கொண்டு தாக்க முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே, அரண்மனைக்கு செல்லும் முக்கிய சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரு நபர் மற்றொருவரை நோக்கி பட்டாக்கத்தியை வீச முயன்ற நிலையில், அது கையில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆயுதத்தை பறிமுதல் செய்து, இருவரையும் அரண்மனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com