

தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு,
திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 24 மணி நேரமும் இந்த மருத்துவமனையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பாதுகாப்பு பணியில் தனியார் நிறுவன காவலாளிகள் அமர்த்தப்பட்டனர். இந்த நிலையில், மகப்பேறு வார்டில் முதன் முறையாக 8 திருநங்கைகள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் காவலாளியாக பணி வழங்கியது தங்களுக்கு பெருமையாக உள்ளதாக திருநங்கைகள் தெரிவித்தனர். இது போன்று, திருநங்கைகளுக்கு அனைத்து துறைகளிலும் பணி வழங்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.