எப்போ வந்தாலும் விதவிதமான உணவுகள்..தஞ்சாவூர் மக்களுக்கு ஹாப்பி நியூஸ்

எப்போ வந்தாலும் விதவிதமான உணவுகள்..தஞ்சாவூர் மக்களுக்கு ஹாப்பி நியூஸ்
Published on

தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள அத்தர் பள்ளிவாசலில் ரமலான் மாதம் முழுவதும் 20 ஆண்டுகளுக்கு மேலாக நாள்தோறும் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

ரமலான் மாதத்தையொட்டி ஒவ்வொரு நாளும் விதவிதமான சஹர் உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், பல்வேறு பகுதியிலிருந்து பலர் இங்கு உணவருந்துவதாகவும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த பள்ளிவாசலில் இருந்து கொரோனா காலத்தில் வீடு தேடி வந்து உணவு வழங்கியதாகவும், இங்கு உணவருந்துவது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com