குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை: இரு குழந்தைகள் உயிரிழந்த சோகம் - ஆபத்தான நிலையில் தந்தை மருத்துவமனையில் அனுமதி

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை தானும் விஷம் அருந்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை: இரு குழந்தைகள் உயிரிழந்த சோகம் - ஆபத்தான நிலையில் தந்தை மருத்துவமனையில் அனுமதி
Published on
சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள இரண்டாம்புலிக்காட்டை சேர்ந்தவர் கதிரவன். கூலி தொழிலாளியான இவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி சுகன்யா ஆர் எஸ்மங்களத்தில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். குழந்தைகளை கதிவரன் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில் விரக்தி அடைந்த கதிரவன் இரு குழந்தைகளுககு விஷம் கொடுத்து தானும் விஷம் அருந்தியுள்ளார். இரு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக சேதுபாவாசத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com