தஞ்சை : தென்னை மரங்கள் சாய்ந்ததால் விவசாயி தற்கொலை

கஜா புயலில் தென்னந்தோப்பு அடியோடு சாய்ந்ததால், விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.
தஞ்சை : தென்னை மரங்கள் சாய்ந்ததால் விவசாயி தற்கொலை
Published on
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன் குடிக்காடு என்ற பகுதியை சேர்ந்த விவசாயி சுந்தரராஜன். இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் தென்னந்தோப்பு, கஜா புயலில் முற்றிலுமாக சேதமடைந்தது. தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்ததோடு, இளநீர் உட்பட தென்னங்குலைகளும் முற்றிலும் உருக்குலைந்தன. இதனால், கடந்த ஒரு வாரமாக கவலையில் இருந்து வந்த சுந்தரராஜன், தென்னை மரத்துக்கு வைக்கபுபடும் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். அங்குள்ள சுடுகாட்டில் சுந்தரராஜன் இறந்து கிடந்தார். புயலால் பாதிக்கப்பட்ட விவசாயி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com