ரூ. 5 லட்சம் கேட்டு பொறியியல் மாணவர் கடத்தல்

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கல்லூரி மாணவன் மாயமானதும், கடத்தியுள்ளதாக தொலைபேசி தகவல் வந்ததும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரூ. 5 லட்சம் கேட்டு பொறியியல் மாணவர் கடத்தல்
Published on

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கல்லூரி மாணவன் மாயமானதும், கடத்தியுள்ளதாக தொலைபேசி தகவல் வந்ததும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சாகுல் அமீதின் மகனான மும்தசர், பொறியியல் படித்து வருகிறார். தந்தை வெளிநாட்டில் உள்ள நிலையில், தாயுடன் வசித்து வந்த அவர், நண்பரின் திருமணத்துக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், அவரது செல்போனில் இருந்து வந்த அழைப்பில் பேசிய மர்மநபர்கள், மும்தசரை கடத்தியுள்ளதாகவும்,

கோயம்புத்தூர் அழைத்துச் செல்வதாகவும், அவரை விடுவிக்க 5 லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து அவரது அம்மா அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com