Thanjavur | சீறிப்பாய்ந்து ஓடும் காவிரி நீர்.. கடல்போல் மாறிய கல்லணை

சீறிப்பாய்ந்து ஓடும் காவிரி நீர்.. கடல்போல் மாறிய கல்லணை

சீறிப்பாய்ந்து ஓடும் காவிரி நீர்.. கடல்போல் மாறிய கல்லணை #Thanjavur #Cauvery #thanthitv தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கல்லணையில் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காவிரி ஆற்றில் நீர் திறப்பு குறைக்கப்பட்டு தற்போது 1,815 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, வெண்ணாற்றில் இன்று முதல் கூடுதலாக 7,005 கன அடி காவிரி நீர் முறைப்பாசன அடிப்படையில் திறக்கப்பட்டு வருகிறது. மேலும், கல்லணைக் கால்வாயில் 1,500 கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் 1,251 கன அடியும் நீர் திறக்கப்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகளுக்குத் தேவையான நீரைப் பகிர்ந்தளிக்கும் வகையில், கல்லணையில் இருந்து பல்வேறு ஆறுகளிலும் நீர் திறப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது

X

Thanthi TV
www.thanthitv.com