தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவை தமிழில், நடத்த உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது குடமுழுக்கு நடைபெறும் அனைத்து இடங்களிலும் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவித்த இந்து அறநிலையத்துறை, அது தொடர்பான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. இதையடுத்து, வழக்குகளின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.