

சித்திரை திருவிழாவையொட்டி உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியது முதல் காலை மாலை என இருவேளைகளும் சாமி புறப்பாடு நடைபெறுவது வழக்கம். சித்திரை திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு பெரிய கோவிலில் பந்தக்காலுக்கு பால் மஞ்சள், திரவியப்பொடிகளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.