

தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் ஆனைக்கொம்பன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப்சிங் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இன்று இரவு 12 மணி வரை நேரம் இருப்பதால் உடனடியாக அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.