மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உடன் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சந்தித்து பேசினார். சந்திப்பின் போது, தமிழகத்தில் பருவமழை தொடங்க உள்ளதால் அதற்கு, தேவையான நிலக்கரியை கூடுதலாக தொடர்ச்சியாக வழங்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கோரிக்கை விடுத்தார். டெல்லி வந்துள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, பல்வேறு அமைச்சர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.