

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நகைச்சுவை நடிகர் தவசியை திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்து நிதியுதவி வழங்கினார். இதேபோல் நடிகர் தவசியை, நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சந்தித்து 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார்.