தாமிரபரணி நதி மாசு அடைவதை தடுக்க நடவடிக்கை

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்து மாசடைவதை தடுக்கவும், மறுசீரமைப்பு செய்யவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
தாமிரபரணி நதி மாசு அடைவதை தடுக்க நடவடிக்கை
Published on

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்து மாசடைவதை தடுக்கவும், மறுசீரமைப்பு செய்யவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கு, தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் சய்பால் தாஸ்குப்தா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தி, மறு சீரமைப்பு செய்ய அரசு திட்டம் வைத்துள்ளதா? அதன் நிலை என்ன? என்பது தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com