தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தும் பணி தீவிரம் - மாணவர்கள், தன்னார்வலர்கள் உட்பட 5 ஆயிரம் பேர் பங்கேற்பு

நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் இன்று பள்ளி மாணவர்கள் உள்பட 5 ஆயிரம் பேர் ஈடுபட்டனர்.
தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தும் பணி தீவிரம் - மாணவர்கள், தன்னார்வலர்கள் உட்பட 5 ஆயிரம் பேர் பங்கேற்பு
Published on
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில், இன்று பள்ளி மாணவர்கள் உள்பட 5 ஆயிரம் பேர் ஈடுபட்டனர். பிரதமரின் "தூய்மையே நமது கடமை" என்ற நிகழ்ச்சி மூலம், தாமிரபரணி நதி பாயும் 64 கிலோமீட்டர் தொலைவுக்கு, சுத்தப்படுத்தும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், பாபநாசம் முதல் சீவலப்பேரி வரை 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு தாமிரபரணி நதிக்கரையில் இருந்த முட்புதர்கள் மற்றும் செடிகள், இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. இந்நிலையில் இன்று மாவட்டத்தின் 61 இடங்களில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதனை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் நேரில் பார்வையிட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com