கடந்த ஆண்டு கொள்ளை நடந்த வீட்டில் இப்போதும் கொள்ளை : அதே கொள்ளையன் மீண்டும் கைவரிசையா என விசாரணை

கடந்த ஆண்டு கொள்ளை நடந்த அதே வீட்டில், மீண்டும் திருடு போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு கொள்ளை நடந்த வீட்டில் இப்போதும் கொள்ளை : அதே கொள்ளையன் மீண்டும் கைவரிசையா என விசாரணை
Published on

கடந்த ஆண்டு கொள்ளை நடந்த அதே வீட்டில், மீண்டும் திருடு போனது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை , கிழக்கு தாம்பரம், கணபதிபுரத்தை சேர்ந்த காட்வின் சாத்ராக், என்பவரின் வீட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 55 சவரன் நகை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது. இந்த கொள்ளையில் இன்னும் துப்பு துலங்காத நிலையில், அந்த வீட்டில் ஜான் பால் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.

இந்நிலையில், ஜான்பால் மற்றும் அவரது மனைவி வெளியில் சென்றிருந்த நிலையில், வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த ஒரு சவரன் மோதிரத்தை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். அங்கிருந்த சிசிடிவி காட்சிகள் மூலமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு கொள்ளையடித்த திருடனே இந்த முறையும் வந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com