ரிப்போர்ட்டரை ஒருமையில் பேசி மிரட்டிய புஸ்ஸி ஆனந்த்.. பின்னால் சவுண்ட்விட்ட ரசிக நிர்வாகிகள்

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் சார்பில் பொன்னேரியில் 2 பயனாளிகளுக்கு இலவச வீடு வழங்கப்பட்டுள்ளது. இதனை, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார். தலா ஒரு லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் 2 வீடுகளை, பாபு மற்றும் சபீதா ஆகிய பயனாளிகளுக்கு வழங்கி வாழ்த்தினார். மேலும், அவர்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள், மளிகைப் பொருட்களையும் வழங்கினார். அவரிடம், நிர்வாகிகள் கட்டி தரும் வீடுகளுக்கு விஜய் ரசிகர் வீடு வழங்கும் திட்டம் என பெயர் வைக்கலாமே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, உங்களுக்கு தெரியுமா என்று புஸ்ஸி ஆனந்த் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

X

Thanthi TV
www.thanthitv.com