தை அமாவாசை - அக்னி தீர்த்தத்தில் அலைமோதிய கூட்டம் | Thai Amavasai

தை அமாவாசையையொட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கடற்கரையில் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்த மக்கள், பின்னர் கடலில் புனித நீராடினர். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் ராமேஸ்வரத்திற்கு வருகை தந்து, தங்களது குடும்பத்தில் இறந்த மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர், 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமியை தரிசனம் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com