ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் குறித்த விவரங்களை அனுப்ப உத்தரவு

அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணிபுரிந்து வரும் ஆயிரத்து 747 ஆசிரியர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் குறித்த விவரங்களை அனுப்ப உத்தரவு
Published on

அரசு நிதியுதவியுடன், தனியார் நிர்வாகங்கள் மூலம் நடத்தப்படும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காத நிலையில் ஆயிரக்கணக்கானவர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத 4 முறை வாய்ப்பு அளிக்கப்பட்டும் தேர்ச்சி பெறாத நிலையில், தற்போது திடீரென, பள்ளிக்கல்வித்துறை முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.அதில் 4 முறை வாய்ப்பு அளித்தும், ஆசிரியர் தகுதி தேர்வை முடிக்காமல் ஆயிரத்து 747 ஆசிரியர்கள் பணி புரிந்து வருவதாகவும், ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ், டெட் தேர்வை முடிக்காமல், பணியாற்ற முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆயிரத்து 747 ஆசிரியர்களின் விவரங்களை, 20 ம் தேதி பகல் 2 மணிக்குள், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் வழங்கிய கடைசி வாய்ப்புகளும் முடிந்துவிட்ட நிலையில், அரசின் இந்த நடவடிக்கை காரணமாக ஆசிரியர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com