ISRO | நெல்லை இஸ்ரோ மையத்தில் சோதனை வெற்றி! - சீறும் மீத்தேன் என்ஜின்
நெல்லை இஸ்ரோ மையத்தில் சோதனை வெற்றி!
#nellai | #mahendragiri | #ISRO நெல்லை இஸ்ரோ மையத்தில் சோதனை வெற்றி! - சீறும் மீத்தேன் என்ஜின் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில், எதிர்கால ராக்கெட் பயன்பாட்டிற்கான மீத்தேன் என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. இதுவரை திரவ ஹைட்ரஜன் போன்ற எரிபொருட்களை பயன்படுத்தி வந்த இஸ்ரோ, குறைந்த செலவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றாக மீத்தேன் பயன்பாட்டை முன்னெடுத்துள்ளது. அதிநவீன உந்து விசை அறையில் நடத்தப்பட்ட சோதனையில், அழுத்தம், வெப்பநிலை மற்றும் உந்து சக்தி உள்ளிட்ட அனைத்து அளவுகோள்களும் துல்லியமாக பதிவாகின. நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளை இந்த என்ஜின் பூர்த்தி செய்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
