Nellai | பிரியாணி கேட்டவர் வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய பயங்கரம் - நெல்லையில் அதிர்ச்சி
நெல்லையில் மது போதையில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய நடன கலைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
நெல்லை மேலப்பாளையம் பீடி காலனியைச் சேர்ந்த மூர்த்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் நடனமாடும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் கோவையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் வீடு எடுத்து வசித்து வந்ததாக தெரிகிறது. மூர்த்தி அடிக்கடி மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல்
இருந்ததை அந்த பெண் கண்டித்ததால், இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மூர்த்தி அப்பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றிய நிலையில், அப்பெண்ணுக்கு மூர்த்தியின் நண்பர் செல்வம் அடைக்கலம் கொடுத்துள்ளார். இதனால் மூர்த்தி கோபமாக இருந்த நிலையில், கடந்த 18ம் தேதி செல்வத்துடன் இருந்து கொண்டு அப்பெண், மூர்த்திக்கு அழைத்து பிரியாணி வாங்கி வருமாறு கூறியதாக தெரிகிறது. இதனால்
ஆத்திரமடைந்த மூர்த்தி, பிரியாணிக்கு பதில் மண்ணெண்ணெய் குண்டுடன் சென்று போதையில் செல்வம் வீட்டின் முன்பு வீசியுள்ளார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது. போலீசார்
மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
