துணைமின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து.. சென்னையில் பரபரப்பு
கொடுங்கையூர் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கொடுங்கையூரில், அமைந்துள்ள துணை மின் நிலைய மின்மாற்றியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், வெகு நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. இதன் காரணமாக அருகில் உள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. அதிக வெப்பம், அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டிருக்கிலாம் என கூறப்படுகிறது.
Next Story
