Teppakulam| 400ஆண்டுகால மதுரையில் அடையாளம் மீண்டது.."கேட்கும்போதே குதூகலமா இருக்கே..ஒருநாள் போகணும்"

x

வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் படகு சவாரி தொடக்கம்...நான்கு நூற்றாண்டு காலமாக மதுரையின் அடையாளமாக நிலைத்திருக்கும், வண்டியூர் மாரிம்மன் தெப்பக்குளத்தில் மீண்டும் படகு சவாரி தொடங்கியுள்ளதால் சுற்றுலாவாசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்... அது குறித்து இந்த குறுந்தொகுப்பில் காணலாம்.... மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர், தன் அரண்மனைக்காக மண் தோண்டிய இடம், பெரும் பள்ளமாகி குளம் போல காட்சி அளிக்க, அந்த இடத்தை குளமாகவே மாற்றினார் மன்னர்....நான்கு நூற்றாண்டுகளை கடந்து தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு ஆதரமாக மாறியுள்ள இத்தெப்பக்குளம், 305 மீட்டர் நீளமும், 290 மீட்டர் அகலத்துடன் நான்கு பக்கங்களிலும் வாயில்கள் அமைக்கப்பட்டு எழிலுடன் திகழ்ந்து வருகிறது.... இதன் மையக்கோபுரம், பல்லவர் கட்டட கலையையும், முகலாயர்களின் கட்டடக் கலையையும் உள்ளடக்கி, உருவானதாக கூறப்படுகிறது...இடைப்பட்ட காலத்தில் தண்ணீர் இல்லாமல் வரண்ட நிலமாக மாறிய இந்த குளத்தினை, வடகிழக்கு பருவமழையும், வைகை ஆறும் புத்துயிர் பெறச் செய்துள்ளது. தற்போது கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீர் ததும்ப ததும்ப நிரம்பியுள்ளது.இங்கு மீண்டும் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா வாசிகளின் மெனுவில் மீண்டும் இந்தக் குளம் இணைந்துள்ளது.குளத்தில், கழிவுகளையோ, திண்பண்டங்களையோ கொட்டி அசுத்தப்படுத்த வேண்டாம் என்றும், சுற்றுலாத்துறை இதில் தனி கவனம் செலுத்தி, மேலும் இதனை மெருகேற்ற வேண்டும் என்றும் அப்பகுதியினர் சுற்றுலாத்துறையிடம் கோரிக்கை வைத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்