நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எம்.பிக்கள் முன்னிலையில் பெண் தீ குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு.

x

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எம்.பிக்கள் முன்னிலையில் பெண் தீ குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு.

மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தீவிர விசாரணை நடத்தி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் நாமக்கல் எம்.பி.மாதேஷ்வரன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி ஆகியோர் கூட்டத்தை முடித்து விட்டு தரைத்தளத்தில் உள்ள அவர்களது வாகனத்தில் ஏறி செல்வதற்காக போர்டிகோவிற்கு வந்தனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயற்சி செய்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த எம்.பிக்கள் மாதேஸ்வரன், ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி ஆகியோர் தடுத்து நிறுத்தினர்

மேலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் அப்பெண்ணை அழைத்து சென்று உடலில் தண்ணீரை உற்றினர்.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி அப்பெண்ணிடம் விசாரித்த போது ...

தனது பெயர் ஜிலானி என்பதும் நாமக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி ஊத்துவாரி கிராமத்தை சேர்ந்வர் என்றும் ஒவ்வொரு சந்தைக்களுக்கு சென்று மளிகை பொருட்கள் விற்கும் தொழில் செய்து வருவதாகவும் தொழில் சம்மந்தமாக சேந்தமங்கலத்தை சேர்ந்த முருகன் என்பவரிடம் 6 இலட்சம் கடனாக பெற்ற நிலையில் 13 இலட்சம் வரை கட்டி விட்டோம் ஆனால் மேலும் 17 இலட்சம் வரை பணம் செலுத்த வேண்டும் எனவும் மேலும் எனது வீட்டையும் அபகரித்து விட்டனர்,

இது சம்மந்தமாக கடந்த 2022 ம் ஆண்டு நாமக்கல் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு இருந்தாலும் தொடர்ந்து முருகன் மற்றும் இவரது மனைவி ஆகியோர் பணத்தை கேட்டு துன்புறுத்துகின்றனர்

இதனால் மன உளைச்சல் காரணமாக நீதிகேட்டு தீ குளிக்க முயற்சி செய்தேன் என கூறியதையடுத்து மாவட்ட ஆட்சியர் துர்க்கமூர்த்தி பெண்ணை உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்து சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார் இதனைத் தொடர்ந்து பெண்ணின் பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்த போலீசாருக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆட்சியர் முன்னிலையில் முன்னிலையில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது


Next Story

மேலும் செய்திகள்