கடலூரில் தணிந்த பதற்றம்... மீண்டும் தொடங்கிய பேருந்து சேவை...!

கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலை நிறுத்தப்பட்ட பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கின. என்.எல்.சி நிறுவனம், நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாவட்டம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் கல்வீச்சில் சேதம் அடைந்தன. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று மாலை 6 மணிக்கு பிறகு அரசு பேருந்துகளின் சேவை மாவட்டம் முழுவதும் முழுமையாக நிறுத்தப்பட்டது. இரவு ஒன்பது மணிக்கு பிறகு தனியார் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. நேற்றிரவு கடலூர் மாவட்டம் வழியாக சென்ற வெளியூர் பேருந்துகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன. இந்நிலையில், இன்று காலை 6 மணி முதல் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com