Ramanathapuram | கலெக்டரிடம் மனுகொடுக்க அரிவாளோடு வந்தவரால் பரபரப்பு
கலெக்டரிடம் மனுகொடுக்க அரிவாளோடு வந்தவரால் பரபரப்பு
கலெக்டரிடம் மனு கொடுக்க அரிவாளோடு சென்ற முதியவர்
இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க அரிவாளோடு வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாமிற்கு வரும் பொதுமக்களை தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிப்பார்கள். அவ்வாறு சோதனை செய்த போது எம்.பி.வலசை கிராமத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் என்பவர் அரிவாளுடன் வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவரை தாக்கிய நபர்கள் மீது புகார் அளிக்க ஆட்சியர் அலுவலகம் வந்ததாகவும், வீட்டில் அரிவாளை வைத்தால் திருடி விடுவார்கள் என்பதால் எடுத்து வந்ததாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து அவரிடமிருந்து அரிவாளை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story