260 குடும்பங்களுக்கு வந்த நோட்டீஸ்.. தூக்கி வாரிப்போட வைத்த செய்தி.. அதிர்ச்சியில் மக்கள்
தென்காசியில், கோவில் நிலத்தில் குடியிருப்போர் 16 கோடி ரூபாய் வரி பாக்கி செலுத்த வேண்டுமென வந்த நோட்டீஸால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சில்லரைப்புரவு ஊராட்சியில், திருமலை குமார சுவாமி கோவிலுக்கு சொந்தமான 53 ஏக்கர் நிலத்தில், 260-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு குடும்பத்தினரும் தலா 6 லட்ச ரூபாய் வரி பாக்கி செலுத்த வேண்டுமென கூறி கோயில் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, நோட்டீஸை திரும்பப் பெறக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.
Next Story
