Tenkasi | Temple | கோயில் கோபுரத்தில் பீடி சுற்றும் சிற்பம் - ஆச்சரியமூட்டும் சுவாரஸ்ய தகவல்

x

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் அமைந்துள்ள நத்தம் மாரியம்மன் கோயில் திருப்பணியின் ஒருபகுதியாக, கோபுரத்தில் பீடி இலைகள் சுற்றும் பணியின் சிற்பம் இடம்பெற்று இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கோபுரத்திற்கான சிற்ப வேலைபாடுகளில் தமிழர்களின் பாரம்பரியமான பனைமரம் ஏறுதல், கிணற்றில் நீர் இரைத்து விவசாயம் செய்தல் உள்ளிட்டவை உடன் பீடி இலைகள் சுற்றும் பணிக்கு பெருமை சேர்க்கும் விதமாக அதன் சிற்பத்தையும் செதுக்கி இருப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், தங்களுக்கு வாழ்வாதாரமான பீடி இலைகள் சுற்றும் பணியில் கிடைக்கும் வருமானத்தையும், பொதுமக்கள் கோயில் திருப்பணிக்காக அளித்து உள்ளதாக பொதுமக்கள் நெகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்