விமான பயண ஆசையை நிறைவேற்றிய HM.. ``ரொம்ப சந்தோசமா இருக்கு'' - மாணவர்கள் சொன்ன வார்த்தை

x

விமான பயண ஆசையை நிறைவேற்றிய HM.. ``ரொம்ப சந்தோசமா இருக்கு'' - மகிழ்ச்சியின் உச்சியில் மாணவர்கள் சொன்ன வார்த்தை

அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களின் விமான பயண ஆசையை, நண்பர்கள் மற்றும் ஊர் மக்கள் உதவியுடன் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நிறைவேற்றிய நிகழ்வு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தென்காசி மாவட்டம் கொண்டலூர் ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பயின்று வரும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ரைட் சகோதரர்கள் குறித்த வகுப்பின் போது விமானத்தில் பயணிக்க ஆசை எழுந்துள்ளது. இதனை அறிந்த தலைமை ஆசிரியர், மதுரையில் இருந்து சென்னைக்கு 20 மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்களை, விமானத்தில் அழைத்து சென்று அவர்களின் ஆசையை நிறைவேற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்