ஸ்கேட்டிங்கில் உலக சாதனை செய்து 4 வயது பள்ளி மாணவன் அஜய் அசத்தியுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு புதூரை சேர்ந்த சவர தொழிலாளியான கோட்டியப்பன் - பாண்டீஸ்வரி தம்பதியினரின் மகன் அஜய் புதிய உலக சாதனை படைத்துள்ளார். கனடாவை சேர்ந்த 'யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்'' புத்தகத்தில் இடம் பெறுவதற்காக நடத்தப்பட்ட ஸ்கேட்டிங்கில், ஏழு கிலோ மீட்டர் தூரத்தை 29 நிமிடங்களில் கடந்து மாணவர் அஜய் புதிய சாதனை படைத்துள்ளார்.