தென்காசி புதிய பேருந்து நிலையத்திற்கு.. பா.சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட தீர்மானம்

x

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் நடைபெற்ற தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் மாநில கல்விக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தென்காசி புதிய பேருந்து நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் பெயரை சூட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும், அரசு தேர்வுக்கான இலவச பயிற்சி மையங்கள் தொடங்க வேண்டும் உட்பட எட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்