தமிழ்நாடு
Tenkasi | School Student | முதல்முறையாக விண்ணில் பறக்கும் அரசு பள்ளி மாணவர்கள்
முதல் விமான பயணம் செய்யும் தென்காசி அரசு பள்ளி மாணவர்கள் பாவூர்சத்திரம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் முதன்முறையாக விமானத்தில் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கொண்டலூர் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் 21 மாணவர்கள் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்ய உள்ளனர். ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுடன் இண்டிகோ விமானத்தில் தூத்துக்குடியில் இருந்து சென்னை புறப்படும் அவர்கள், பிர்லா கோளரங்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம், ஐஐடி, வண்டலூர் உயிரியல் பூங்காவை காண திட்டமிடப்பட்டுள்ளது.
