

தென்காசியை சேர்ந்த மீன் வியாபாரி அருண்குமார் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஆலங்குளம் டி.எஸ்.பி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்ந்த அருண்குமார் மனைவி ஜமுனாபாய், பாவூர்சத்திரம் போலீசார் சித்ரவதை செய்ததால் தான் தனது கணவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக மனுவில் குறிப்பிட்டு இருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, ஆலங்குளம் டி.எஸ்.பி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை 3 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.