Tenkasi | Book Fair | பொதிகை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் படைப்புகள்
பொதிகை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் படைப்புகள்
Tenkasi | Book Fair | பொதிகை புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களின் படைப்புகள் பொதிகை புத்தகத் திருவிழாவில் அரசுப்பள்ளி மாணவர்களின் படைப்புகள் தென்காசி பொதிகை புத்தகத் திருவிழாவில் அரசு பள்ளி மாணவர்கள் எழுதிய புத்தகங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இ.சி.ஈஸ்வரன் பள்ளி மைதானத்தில் நான்காவது பொதிகை புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், இலஞ்சி அரசு பள்ளி மாணவன் முகமது இம்ரானின் "என் சுவாசம்" கவிதைத் தொகுப்பும், 11ம் வகுப்பு மாணவிகள் எழுதிய தென்காசி சாரல் நூலும் இடம் பெற்றுள்ளன. பல்வேறு எழுத்தாளர்களின் நூல்களுக்கு மத்தியில், இளம் படைப்பாளர்களை அங்கீகரித்த இந்த நிகழ்வு பாராட்டைப் பெற்றுள்ளது.
