பழனி அருகே நெய்க்காரபட்டி பகுதியில் மின் மாற்றியில் ஏற்பட்ட பழுதை சீரமைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் தற்காலிக பணியாளர் தன்னாசி உயிரிந்தார். தகவலின் பேரில் போலீசார் தன்னாசி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே தன்னாசி குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.