அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 3 ஆயிரத்து 624 தமிழ் வழி இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து, தகுதியான நபர்கள் பட்டியல் தற்போது வரை பெறப்படவில்லை என கூறப்படுகிறது. அதுவரை மாணவர்கள் நலன் கருதி, தற்காலிகமாக, தொகுப்பூதியம் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாதம் 7 ஆயிரத்து 500 சம்பளம் வழங்கப்படும் என்றும் இதற்காக 8 கோடி 15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் முதல் ஏப்ரல் வரை, மூன்று மாதங்களுக்கு மட்டும், ஒப்பந்த அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.