களைகட்டிய மயான கொல்லை விழா... மாரியம்மன், பத்தரகாளி, காட்டேரி வேடமிட்டு நேர்த்தி கடன்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி கீழையூர் பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான கொல்லை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில், திருக்கோவிலூரை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அங்காள அம்மனை வழிபட்டனர். பலர் மாரியம்மன், பத்தரகாளி, காட்டேரி போன்ற வேடமிட்டும், திருக்கோவிலூர் ஏரிக்கரை மூலையில் இருந்து கீழையூர் வரை சென்று தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.
