"கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற 6 வாரம் அவகாசம்" - அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில்களில் சுத்தமின்மையை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
"கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற 6 வாரம் அவகாசம்" - அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

சென்னை அயனாவரம் கரியமாணிக்க பெருமாள் கோயிலை நிர்வகிக்க தன்னை அனுமதிக்க கோரி செந்தில்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, கோயில் சுத்தமாக பராமரிக்கப்படுவதில்லை என்பதற்கான புகைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அதேபோல கோயிலுக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

கோயில்களில் சுத்தமின்மையை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்த நீதிபதி, பக்தி சூழலை ஏற்படுத்தும் வகையில் கோயில்களை சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைக்கு ஆஜராகியிருந்த அறநிலையத்துறை இணை ஆணையர், ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் சொத்துக்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்ததார். இதையடுத்து, 6 வாரத்திற்குள் கோயில் சொத்துக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டு, வழக்கை ஜனவரி 2-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com