

திருக்கோயில் ஊழியர்களுக்கு, அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி வழங்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பகுதி நேர பணியாளர்கள், தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்வு பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.