கோயிலில் திருட வந்த இடத்தில் தூங்கிய திருடன் : 18 ஆண்டுகளாக கோயில்களில் திருடியது அம்பலம்

கோயிலில் திருட வந்த இடத்தில் தூங்கியதால் போலீஸில் திருடன் சிக்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோயிலில் திருட வந்த இடத்தில் தூங்கிய திருடன் : 18 ஆண்டுகளாக கோயில்களில் திருடியது அம்பலம்
Published on
கோயிலில் திருட வந்த இடத்தில் தூங்கியதால் போலீஸில் திருடன் சிக்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் பகுதியில் கோயில் வளாகத்திற்குள் மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பி, டார்ச் லைட்டுடன் போதையில் தூங்கியுள்ளார். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், அவர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த செந்தூர்பாண்டி என்பது தெரியவந்தது. கட்டிட தொழிலாளியான இவர், போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் கோயில்களில் திருடி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புலிகுத்தி கிராமத்தில் உள்ள சிவன்கோவில் உண்டியலை திருடியது இவர் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து செந்தூர்பாண்டியை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com