Temple Theft CCTV | மாதாமாதம் ஒரே கோயிலில் நடந்த கைவரிசை - அம்மன் நகைகளை ஆட்டைய போட்ட முகமூடி ஆசாமி

மாதாமாதம் ஒரே கோயிலில் நடந்த கைவரிசை

#Temple #Theft #CCTV #Kulithalai #ThanthiTV Temple Theft CCTV | மாதாமாதம் ஒரே கோயிலில் நடந்த கைவரிசை - அம்மன் நகைகளை ஆட்டைய போட்ட முகமூடி ஆசாமி குளித்தலை அம்மன் கோவிலில் தொடர்ந்து நகை மற்றும் பணம் திருடு போவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கருப்பத்தூரில் அமைந்துள்ளஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இரவு நுழைந்த முகமூடி அணிந்த மர்ம நபர், சிசிடிவி கேமராவை திசை திருப்பி கோவிலின் பூட்டு, கதவுகளை உடைத்து அம்மன் சிலையில் இருந்த 4 கிராம் தங்க செயின், உண்டியலில் இருந்த சுமார் 3,000 ரூபாய் பணத்தை திருடி சென்றுள்ளார். இதேக்கோவிலில் கடந்த மாதம் 6ம் தேதி மர்ம நபர் ஒருவர் கோவிலின் பூட்டை உடைத்து ஒன்றரை பவுன் அம்மனின் நகை மற்றும் உண்டியலில் இருந்த 50,000 பணத்தை திருடியுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com