

ஈரோட்டில் ஸ்ரீபெரிய மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களின் முன் இந்து முன்னணி அமைப்பினர் ஒற்றைக்காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அம்மன் வேடமணிந்து அவர்கள் நூதனமான முறையில் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்லில் பல்வேறு கோயில்களின் முன் ஒற்றைக்காலில் நின்ற இந்த முன்னணி அமைப்பினர் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் மணப்பாறையில் உள்ள கோயிலின் முன் இந்து முன்னணி அமைப்பினர் கோயில்களை திறக்குமாறு ஒற்றைக்காலில் நின்று கோஷங்களை எழுப்பினர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கோயில்களை திறக்கக்கோரி இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பூட்டிக்கிடக்கும் கோயில் வாசலில் சூடம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.