#Breaking : கோயில் நிலம் - 31,000 ஏக்கர் அளவீடு | HRCE | TN Temples

கோயில் நிலம் - 31,000 ஏக்கர் அளவீடு

கோயில்களுக்குச் சொந்தமான 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் நில அளவையாளர்கள் மூலம் அளவீடு பணி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சேகர்பாபு பல்வேறு கோயில்களில் ஆய்வு மேற்கொண்டார்

ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோயில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார்

நவீன ரோவர் உபகரணங்களை பயன்படுத்தி கோயில் நிலங்கள் அளவீடு பணிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 3660.54 ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டது தமிழக அரசு

திருச்சி மாவட்டத்தில் 3151.14 ஏக்கர், திருப்பூர் மாவட்டத்தில் 3043.77 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு

நெல்லை மாவட்டத்தில் 2705.79 ஏக்கர், சிவகங்கை மாவட்டத்தில் 1897.51 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்பு

பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 31,670.64 ஏக்கர் நிலங்கள் அளக்கப்பட்டுள்ளது

அளவீடு செய்யப்பட்ட நிலங்களில் HRCE என்ற பெயர் பொறிக்கப்பட்ட எல்லைக்கல் நடப்பட்டு கம்பிவேலி அமைக்கும் பணி

150 நில அளவையர்கள் மூலம் 56 ரோவர் கருவிகளைக் கொண்டு அளவீடு பணிகள் நடைபெற்று வருகிறது

கோயில் நிலம் அளவீடு பணிகளை விரைந்து முடிக்க வட்டாட்சியர்களுக்கு அறிவுரை

X

Thanthi TV
www.thanthitv.com