கோவில் திருவிழா நடத்துவதில் பிரச்சினை - தேர்தலை புறக்கணிக்க முடிவு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கோவில் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மக்கள் அறிவித்துள்ளனர்.
கோவில் திருவிழா நடத்துவதில் பிரச்சினை - தேர்தலை புறக்கணிக்க முடிவு
Published on
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கோவில் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மக்கள் அறிவித்துள்ளனர். சக்கம்பட்டியில் முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை நிறுத்துவதற்கான முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல அவர்கள் நேற்று மாலை போராட்டத்தை தொடங்கினர். கோவில் பிரச்சினைக்கு அரசு உடனடியாக தீர்வு காணாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்துவதுடன் பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com