போச்சம்பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த கோவில் காளை மீட்பு
போச்சம்பள்ளி அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்த கோவில் காளையை தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்
போச்சம்பள்ளி அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்த கோவில் காளையை தீயணைப்பு வீரர்கள் 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பாளேத்தோட்டம் கிராமத்தில் வீடு கட்டும் பணிக்காக தோண்டப்பட்டிருந்த கழிவுநீர் தொட்டிக்குள், அங்கு விளையாடிக் கொண்டிருந்த கோவில் காளைகளில் ஒன்று தவறி விழுந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஜேசிபி உதவியுடன் நீண்ட நேரம் போராடி காளையை உயிருடன் மீட்டனர்.