பொங்கல் விழா மற்றும் கலாச்சார ஊர்வலம் - தெலங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை வட்டார அனைத்து இந்து சமூதாயம் சார்பில் பொங்கல் விழா மற்றும் கலாச்சார ஊர்வலம் நடைபெற்றது.
பொங்கல் விழா மற்றும் கலாச்சார ஊர்வலம் - தெலங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்பு
Published on

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை வட்டார அனைத்து இந்து சமூதாயம் சார்பில் பொங்கல் விழா மற்றும் கலாச்சார ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் சிங்காரி மேளம், தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், இதிகாசங்களை பிரதிபலிக்கும் பொம்மையாட்டம் என நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சிறப்பு விருந்தினராக பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர் தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் பாலமாக இருப்பேன் என்று குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com