"தெலுங்கானா என்கவுன்டரை ஆதரித்து திருப்பூர் ஆட்சியர் டுவிட்" - "ஆட்சியரின் கருத்தால் சமூக வலைதளத்தில் சர்ச்சை"

தெலுங்கானாவில் நடத்தப்பட்ட என்கவுண்டருக்கு ஆதரவாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ரஜினி பட பாடல் வரியுடன் செய்த டுவிட் சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"தெலுங்கானா என்கவுன்டரை ஆதரித்து திருப்பூர் ஆட்சியர் டுவிட்" - "ஆட்சியரின் கருத்தால் சமூக வலைதளத்தில் சர்ச்சை"
Published on

தெலுங்கானாவில் நடத்தப்பட்ட என்கவுண்டருக்கு ஆதரவாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் ரஜினி பட பாடல் வரியுடன் செய்த டுவிட் சமூக வலைதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வரும், மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ரஜினி படத்தின் பாடல் வரியான "சும்மாகிழி" என்ற ஆஷ் டேக் பதிவிட்டு, தனது கருத்தை பதிந்திருந்தார். ஆட்சியராக இருந்து கொண்டு என்கவுன்டருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளீர்களே என பலர் சமூக வலை தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு, இது எனது தனிப்பட்ட கருத்து எனவும், தனிப்பட்ட முறையில் இந்த வழக்கிற்கு ஓகே சொல்வேன் என்றும் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com