அதிநவீன சொகுசு வசதி கொண்ட தேஜஸ் ரயில் பெட்டிகள் தமிழகத்தில் விரைவில் அறிமுகம்

தமிழகத்தில் அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட தேஜஸ் ரயில் பெட்டிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
அதிநவீன சொகுசு வசதி கொண்ட தேஜஸ் ரயில் பெட்டிகள் தமிழகத்தில் விரைவில் அறிமுகம்
Published on
தேஜஸ் ரயிலுக்கான பெட்டிகளை தயாரிக்கும் பணியில் ஐசிஎப் ஈடுபட்டுள்ளது. தற்போது தயாரிக்கப்பட்டுள்ள 23 ரயில் பெட்டிகள் வடக்கு மண்டலத்திற்கு அனுப்பப்படவுள்ளன. ஐசிஎப் பர்னிஷிங் பிரிவில் நடைபெற்ற விழாவில், ஐசிஎப் மூத்த ஊழியர் அன்பழகன் ரயில் பெட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த இரயில் பெட்டிகள் சென்னை - மதுரை ரயில் மார்கத்தில் பயன்படுத்தபடவுள்ளதாக ஐசிஎப் அதிகாரிகள் தெரிவித்தனா். ரயில்பெட்டிகளின் உள்புறம் மற்றும் நுழைவு வாயில்களில் சிசிடிவி, பயோ கழிவறைகள், முழுவதும் சீல் செய்யப்பட்ட ரயிலிடை இணைப்புகள், போன்றவை இந்த ரயில்பெட்டிகளின் சிறப்பம்சமாகும்.
X

Thanthi TV
www.thanthitv.com