அரசாணைகளை எரித்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

சம்பள முரண்பாட்டை களைய வலியுறுத்தி, சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரசாணைகளை எரித்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
Published on
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் நடந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். தமிழக அரசைக் கண்டித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழுக்கம் எழுப்பிய அவர்கள், 2009 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட 234, 303 இரு அரசாணைகளை எரித்து கோபத்தை வெளிப்படுத்தினர். ஒரே தகுதி, ஒரே வேலையை செய்து வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டத்தை, மேலும் தீவிரப்படுத்துவோம் என இடைநிலை ஆசிரியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com