பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் - வெளியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்.. பெற்றோர்கள் அதிர்ச்சி

x

திருவாரூர் மாவட்டத்தில் ஆசிரியர்களின் போராட்டத்தின் காரணமாக வகுப்பறைகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்கள் வெளியில் அமர்ந்து படிக்கின்றனர்.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு டிக்டோ ஜாக் அறிவித்துள்ள தொடர் போராட்டம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 2500 ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்துள்ளனர். இதன் காரணமாக மாவட்ட முழுவதும் உள்ள பள்ளிகள் முற்றிலும் முடங்கிப் போய் உள்ளன. நாகராஜன் கோட்டகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியர்கள் யாரும் வராததால் வகுப்பறைகள் பூட்டப்பட்ட நிலையில் மாணவர்கள் வெளியில் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். இதேபோன்று ஓகை பேரையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளும் காரணத்தால், பள்ளிகளில் மாணவர்கள் மட்டும் அமர்ந்திருக்கும் நிலை பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்